தமிழக செய்திகள்

தமிழ்நாடு அரசு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22 கோடி பணம் திருட்டு

பணம் திருட்டு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.22 கோடி ஆன்லைன் முறையில் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போர்ட்டல் ஹேக்கிங் மூலம் பணம் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் பராமரிக்கப்படும் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.22 கோடி ஆன்லைன் முறையில் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போர்ட்டல் ஹேக்

ஊராட்சி ஒன்றியங்களுக்கு நிதி விடுவிப்பதற்காக அரசையும் வங்கியையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட போர்ட்டலை ஹேக் செய்து பணம் திருடப்பட்டுள்ளது.

வங்கி மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் நிதி விடுவிப்பு தளங்களை இணைக்கும் போர்ட்டல் மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெறவிருந்த நிலையில் போர்ட்டலை ஹேக் செய்து பணத்தை திருடியுள்ளனர்.

இச்சம்பவத்தில் வங்கதேசம், அமெரிக்கா, கிரீஸ் ஆகிய நாடுகளில் இருந்து மர்மநபர்கள் ஈடுபட்டு உள்ளது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

SCROLL FOR NEXT