முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-
மாணவர் தங்குமிட வசதியை மேம்படுத்த ரூ.10 கோடி மூலதனம் மற்றும் வெற்றி மடிக்கணினி திட்டம் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் லேப்டாப் வழங்கும் திட்டம். 5 லட்சம் மாணவர்களுக்கான ஸ்மார்ட் சைக்கிள் திட்டத்திற்கு ரூ.277 கோடி, உயர்கல்வித்துதுறைக்கு ரூ.8393 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் வாட்டர் பாட்டில் வைக்கும் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் சைக்கிள்கள் வழங்கப்படும்.
அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2,132 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துப் படிப்புகளில் சேர்க்கை என்பதை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.