தமிழக செய்திகள்

மாதவரம் அருகே ரூ.140 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்- 2 பேர் கைது

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மாதவரம் அருகே மத்திய வருவாய் புலனாய்வுத்துறை நடத்திய சோதனையில் ரூ.140 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அடுத்த மாதவரம் அருகே ரூ.140 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாதவரம் அருகே போதைப்பொருள் காரில் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் காரில் கடத்திவரப்பட்ட 70 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT