சென்னை மாநகராட்சி 
தமிழக செய்திகள்

சென்னையில் சேதமடைந்த 678 சாலைகளை சீரமைக்க ரூ.130 கோடி ஒதுக்கீடு- மாநகராட்சி கமிஷனர் தகவல்

திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் வழங்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ் ரூ. 300 கோடி நிதி ஒதுக்கீட்டில் சாலைகள் மேம்பாட்டு பணிகள மேற்கொள்ளப்படுகிறது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் வழங்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சி

அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு முதற்கட்டமாக விரிவான திட்ட அறிக்கை ரூ.154.16 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு அதில் கண்காணிப்பு குழுவின் பரிந்துரையின்படி முதற்கட்டமாக ரூ.130.19 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டது. அதன்படி 595 தார்சாலைகள் 136.47 கிலோமீட்டர் நீளத்தில் ரூ.120.65 கோடி மதிப்பீட்டிலும், 58 சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் 8.47 கிலோமீட்டர் நீளத்தில் ரூ 7.3 கோடி மதிப்பீட்டிலும், 25 இன்டெர் லாக் பேமென்ட் பிளாக் சாலைகள் 3.06 கிலோமீட்டர் நீளத்தில் ரூ 2.21 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 148.10 கிலோ மீட்டர் நீளத்தில் ரூ.130.19 கோடி மதிப்பீட்டில் செயல் படுத்தப்படுகிறது.

ஒப்பந்த புள்ளி

மண்டலம் 1 முதல் 15 வரையிலுள்ள சேதமடைந்த 678 பஸ் சாலைகள் மற்றும் உட்புற சாலைகளை மேம்படுத்தும் பணிகளுக்கு பல்வேறு சிப்பங்களாக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. ஒப்பந்த புள்ளியின் நடவடிக்கைகள் முடிவுற்று இப்பணிகள் விரைவில் தொடங்கி மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT