தமிழக செய்திகள்

ரூ.100 கோடி மோசடி வழக்கு: முன்ஜாமின் கோரிய அன்பில் மகேஷ் - காவல்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு, அன்பில் மகேஷை 5-வது குற்றவாளியாக சேர்த்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக ரூ.100 கோடி பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், அன்பில் மகேஷின் முன் ஜாமின் மனுவுக்கு பதிலளிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில் பி.டி. அரசகுமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு, அன்பில் மகேஷை 5-வது குற்றவாளியாக சேர்த்துள்ளது.

தன் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி அன்பில் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தநிலையில், இதுகுறித்து காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

SCROLL FOR NEXT