தமிழக செய்திகள்

ரூ.100 கோடி லஞ்ச வழக்கு: முத்துக்குமாருக்கு நவ.12 வரை நீதிமன்றக் காவல்

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ. அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவரும், தி.மு.க. பிரமுகருமான பி.டி.அரசகுமார் உள்பட பலருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர்.

அன்பில் மகேஷ் கைது

அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்ததை அடுத்து, முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார்.

சரண்

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரணம் வழங்குவதில் நடந்த மோசடி விவகாரத்தில் சிக்கிய முன்னாள் எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் நடந்த ரூ.100 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த முத்துக்குமார் சரணடைந்தார்.

முன்ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் நேற் தள்ளுபடி செய்த நிலையில் முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

நீதிமன்றக் காவல்

இந்நிலையில், தனியார் பள்ளி அங்கீகாரத்துக்கு ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சரணடைந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாருக்கு நவ.12 வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல் வகுப்பு சிறை, மருத்துவர் வசதிகள் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், முத்துக்குமாரை கஸ்டடியில் எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT