தமிழக செய்திகள்

சிவகங்கை அருகே ரவுடி சுள்ளான் மதன் கொலை வழக்கில் 3 பேர் கைது

கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட மற்ற எதிரிகளை கைது செய்ய ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை அருகே மேலமங்கலத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான மதன் என்ற சுள்ளான் மதன் (வயது 26) மர்ம நபர்களால கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

கொலை

இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த (பிரதீப் 26), மானா

மதுரை உடகுளம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (19) மற்றும் ஏ.விளாக்குளம் பகுதியைச் சேர்ந்த பாபு (23) ஆகிய 3 பேரும் 12 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சுள்ளான் மதன்

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட மதன் என்ற சுள்ளான் மதன் மீது கடந்த 2024-ம் ஆண்டு நடந்த காளையார் கோவில் சகோதரர்கள் கொலை வழக்கு உட்பட இரண்டு கொலை வழக்குகளும், ஒரு கொலை முயற்சி வழக்கும் மற்றும் 12 இதர வழக்குகளும் சேர்த்து மொத்தம் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சரித்திர பதிவேடு குற்றவாளி

சரித்திர பதிவேடு குற்றவாளியான சுள்ளான் மதன் போலீசாரின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார். கடந்த 30.09.2026 அன்று இவருக்கு சிவகங்கை தாசில்தார் மூலம் நன்னடத்தை பிணை பத்திரம் ஒரு வருடத்திற்கு பெறப்பட்டுள்ளது. மேலும், சிவங்கை நகர் போலீஸ் நிலைய வழக்கில் அவரது நீதிமன்ற ஜாமீனை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

கைது

கடைசியாக சிவகங்கை நகர் காவல் நிலைய குற்ற வழக்கில் கடந்த 01.10.2026 அன்று சுள்ளான் மதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர், ஜாமீன் மூலம் கடந்த 07.10.2026 அன்று சிறையில் இருந்து வெளியே வந்தார். இதையடுத்து அவரை எதிரிகள் கொலை செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட மற்ற எதிரிகளை கைது செய்ய ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT