தமிழக செய்திகள்

வீரவநல்லூரில் போலீஸ் ஏட்டுவை சரமாரி தாக்கிய ரவுடி-கூட்டாளி கைது

ரவுடி நகுல், ஜெயக்குமார் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான மேலும் 2 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லியோ ரெனிஷ், ஏட்டு பிச்சைக் கண்ணு மற்றும் போலீசார் குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வீரவநல்லூர் நயினார் காலனியில் தகராறு நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீரவநல்லூர் போலீஸ் நிலைய ரவுடிகள் சரித்திர பதிவேட்டில் உள்ள நயினார் காலனி களத்துமேட்டு தெருவை சேர்ந்த வெள்ளப்பாண்டி மகன் நகுல்(வயது 23) என்பவர், அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருடன் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

போலீசார்

அவரை போலீசார் எச்சரித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த நகுலின் தம்பி முகேஷ், களத்துமேட்டு தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ஜெயக்குமார்(27) மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு நபர் ஆகியோரும் சேர்ந்து கொண்டு, சீருடையில் இருந்த போலீசாரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், தப்பியோடும் போது ஏட்டு பிச்சைக் கண்ணுவின் சட்டையை பிடித்து இழுத்து தாக்கி கீழே தள்ளிவிட்டு 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

கைது

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் லியோ ரெனிஷ் அளித்த புகாரின் பேரில், நகுல், முகேஷ், ஜெயக்குமார் மற்றும் பெயர் தெரியாத வாலிபர் ஆகிய 4 பேர் மீதும் வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவானவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று ரவுடி நகுல், ஜெயக்குமார் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான மேலும் 2 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT