தமிழக செய்திகள்

தாசில்தார் அலுவலகத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது- நூலிழையில் ஊழியர்கள் உயிர் தப்பினர்

தாசில்தார் அலுவலகத்தில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக தாசில்தார் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

தினந்தோறும் அதிக மக்கள் வந்து செல்லக்கூடிய சூழ்நிலையில், அலுவலகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து உள்ளது, ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

தாசில்தார் அலுவலகம்

தினமும் சாதி சான்று, வருமான சான்று, பட்டா மாறுதல், சட்ட ஒழுங்கு சம்பந்தமான புகார்கள் என மனு கொடுக்க நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

சம்பவத்தன்று தாசில்தார் அலுவலகத்தில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக தாசில்தார் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

தாசில்தார் அலுவலகம்

இந்த நிலையில் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரிவு, ஏ3 பிரிவு அறையின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது.

இந்த அறையின், மேற்கூரை பூச்சு பெரிய துண்டுகளாக பெயர்ந்து கீழே விழுந்துள்ளது. நாற்காலி மீது கான்கிரீட் துண்டுகள் விழுந்ததுடன், மேற்கூரையில் உள்ள இரும்பு கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரிகிறது. அத்துடன் சுவர்கள் முழுவதும் பூச்சு பெயர்ந்து, ஈரம் கசிந்து காணப்படுகிறது. அறை முழுவதும் கான்கிரீட் துகள்கள் சிதறி கிடக்கிறது. மேஜை, கணினி, கோப்புகள் மீதும் பூச்சு துகள்கள் விழுந்து சிதறி கிடக்கிறது.

மேற்கூரை

அதிர்ஷ்டவசமாக அந்த அறையில் இருந்த ஊழியர்கள் நூலிழையில் உயிர் தப்பினர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினந்தோறும் அதிக மக்கள் வந்து செல்லக்கூடிய சூழ்நிலையில், அலுவலகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து உள்ளது, ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எந்த நேரத்திலும் மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக பொதுப்பணித்துறை மூலம் கட்டிடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து, சேதமடைந்த அறைகளை சீரமைக்க வேண்டும் என்றும், ஊழியர்கள், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT