தமிழக செய்திகள்

வாக்குச்சாவடியில் வாக்காளர்களை சாக்லெட் கொடுத்து வரவேற்ற ரோபோ

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேர்தல் நடக்கிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து சென்றனர்.

கோவை கோர்ட்டு எதிரே உள்ள அரசு கலைக்கல்லூரியிலும் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு மொத்தம் 4 பூத் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வந்த வாக்காளர்களை வரவேற்கும் விதமாக ரோபோ வைக்கப்பட்டிருந்தது. அந்த ரோபோ வாக்குச்சாவடி மையத்திற்கு வந்த வாக்காளர்களுக்கு சாக்லெட் கொடுத்து வரவேற்றது. அதன்பின்னர் பொதுமக்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்து சென்றனர்.