தமிழக செய்திகள்

பெரியபாளையம் அருகே போட்டோ ஸ்டூடியோ கடையில் கொள்ளை

கொள்ளை சம்பவம் குறித்து பெரியபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெரியபாளையம் அருகே உள்ள திருக்கண்டலம் பஜார் வீதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருபவர் டில்லி கணேஷ். இவர் இன்று காலை ஸ்டூடியோவை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது.

கொள்ளை

நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் ஸ்டூடியோவுக்குள் புகுந்து அங்கிருந்த விலை உயர்ந்த கேமரா உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ரூ.5ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT