தமிழ்நாடு செய்திகள்

மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை- முதலமைச்சர் அறிவிப்பு

எஸ்பிபி வாழ்ந்த இல்லம் உள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படும் என அறிவிப்பு.பாலு அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்.

மாலை மலர்

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், எஸ்பிபி வாழ்ந்த இல்லம் உள்ள தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவிற்கு "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை" எனப் பெயர் சூட்டப்படுகிறது.

மேலும், "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் அவரது இல்லம் அமைந்துள்ள தெருவிற்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பெயர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களது நினைவு நாளில், அவர் வாழ்ந்த காம்தார் நகர் பிரதான சாலைக்கு "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை" எனப் பெயரிடப்படும் எனும் அறிவிப்பைச் செய்வதில் பாலு அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடும் நிலா #SPBalasubrahmanyam அவர்களது நினைவு நாளில், அவர் வாழ்ந்த காம்தார் நகர் பிரதான சாலைக்கு "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை" எனப் பெயரிடப்படும் எனும் அறிவிப்பைச் செய்வதில் பாலு அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்.#SPBpic.twitter.com/UuwwR1m1E0