சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து காப்பகங்களில் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்குன்றம் ஜி.என்.டி.சாலை மார்க்கெட் பகுதியில் கொட்டி கிடக்கும் மீதமாகும் காய்கறி, கீரைகளை திண்பதற்காக ஏராளமான மாடுகள் சுற்றித் திரிகின்றன.
இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பேரூராட்சி அதிகாரிகள் சாலைகளில் கொட்டப்படும் காய்கறி கழிவுகளை அப்புறப்படுத்தவும், சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து காப்பகங்களில் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.