தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது.
ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. ரவி, தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்பு அடிப்படையில் சில தகவல்களை வெளியிட்டு இருந்தார். அதில்,
234 தொகுதிகளில் 2440 ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகளின் உதவியுடன் 2.44 லட்சம் வாக்காளர்களிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்பட்ட கணிப்புகளை ஏ.ஐ. உள்ளிட்ட பல்வேறு விதமான ஆய்வுகளுக்கு பிறகு, த.வெ.க.வுக்கு 41 சதவீதம் பேர் வாக்களித்து இருப்பதாக கணிக்கப்பட்டது.
மொத்தத்தில் த.வெ.க.வுக்கு இந்த தேர்தலில் 121 இடங்கள் கிடைக்கும். மீதமுள்ள தொகுதிகள் தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவற்றுக்கு இடையேயான இழுபறியாக இருக்கும்.
தமிழ்நாட்டில் தனியாகவே ஆட்சி அமைக்கும் நிலையில் த.வெ.க. இருக்கிறது என்று தெரிவித்து இருந்தார்.
சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 இடங்களில் 105 இடங்களில் தவெக முன்னிலை பெற்றுள்ளது. திமுக 57, அதிமுக 46 இடங்களில் முன்னிலையில் உள்ளன.
ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. ரவி கடந்த 2-ந்தேதி வெளியிட்ட கருத்துக்கணிப்பு தற்போதைய தேர்தல் முடிவுகளுடன் ஓரளவு ஒத்துபோகிறது.