தமிழக செய்திகள்

கிளாண்டர்ஸ் தொற்று பரவல் எதிரொலி - தமிழ்நாடு முழுவதும் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு

முறையாக வழிகாட்டு முறைகளை பின்பற்றி குதிரை சவாரி மேற்கொள்ள வேண்டும் என கால்நடை, பராமரிப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

கிளாண்டர்ஸ் பாக்டீரியா பரவல் எதிரொலி காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடற்கரை, ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களில் சுற்றுலா குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

முறையாக வழிகாட்டு முறைகளை பின்பற்றி குதிரை சவாரி மேற்கொள்ள வேண்டும் என கால்நடை, பராமரிப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

கிளாண்டர்ஸ் பாக்டீரியா பரவல் எதிரொலி காரணமாக குதிரை சவாரிக்கு உடல்நலக்குறைவுக் குதிரைகளை பயன்படுத்த வேண்டாம். குதிரைக்கு காய்ச்சல், இருமல், சளி, தோல் புண்கள், சுவாசக்குறைவு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் சவாரி மேற்கொள்ளக்கூடாது.