எஃப்சிஆர்ஏ சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேறியது. இந்த தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, பாமக, விசிக, இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தீர்மானம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் போகராஜன்.,
“சரியான பொறுப்புக்கூறல்கள் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காகவே சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவருகிறது. சமூக திட்டங்களுக்காக வருகிற பணத்தை நிச்சயமாக மத்திய அரசு எதிர்க்கவில்லை. இதனை வரைமுறைப்படுத்த வேண்டும்.
நல்ல காரியங்களுக்கு உபயோகப்படுத்த வேண்டும். தேசத்தின் நலனுக்கு எதிரான காரியங்களுக்கு இந்த பணம் சென்றுவிடக்கூடாது என்ற நல்ல அக்கறையுடன் இந்த சட்டத்திருத்ததை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
ஆகவே இந்த திருத்தம் அவசியம் என்பதை பாஜக முன்மொழிகிறது.” என தெரிவித்தார்.