தமிழ்நாடு செய்திகள்

ஆடு மேய்த்த 3 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

மூன்று பேரையும் தனியார் தொண்டு நிறுவன குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் பணிபுரிந்ததாக தெரியவந்துள்ளது.

மாலை மலர்

அட்டவாடி:

திருவண்ணாமலை மாவட்டம் அட்டவாடி கிராமத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 3 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் வசந்த் பிரபு தலைமையிலான குழுவினர், அவர்கள் மூன்று பேரையும் தனியார் தொண்டு நிறுவன குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் மூன்று குழந்தைகள் தொழிலாளியாக பணிபுரிந்தது தெரியவந்துள்ளது.