தமிழக செய்திகள்

சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை!

திரைப்பட கட்டணத்தை ரூ.250ஆக நியமனம் செய்யவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்த விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகியுள்ளார். இதனால் அவர் சினிமாத்துறைக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்வார் என பல்வேறு கோரிக்கைகள் அவரிடம் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் தற்போது திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தரப்பில், முதலமைச்சர் விஜய்யிடம் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது திரைப்பட கட்டணத்தை ரூ.250ஆக நியமனம் செய்யவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள், சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் விஜய்யை இன்று சந்தித்த நிலையில், 10 கோரிக்கைகளை முன்வைத்தனர். திரையரங்க உரிமம் புதுப்பித்தல், அனுமதித்தல், திரைப்படங்களுக்கான உள்ளூர் பொழுதுபோக்கு வரியை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய்யிடம் முன்வைத்துள்ளனர்.