தமிழக செய்திகள்

200 முதல் 500 டாஸ்மாக் கடைகள் வரை மூடப்படலாம் எனத் தகவல்..!

கோவில், பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீ. எல்லைக்குள் இருக்கும் மதுபான கடைகள் மூடப்படலாம் எனத் தகவல்.

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று பதவி ஏற்றார். பதவி ஏற்றபின் அவர் தமிழக மக்களிடம் பேசினார். அப்போது, சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் இல்லாத தமிழகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்தார். அத்துடன் 200 யூனிட் மின்சாரம் உள்ளிட்ட 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

நேற்று தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறை செயலாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தமிழகத்தில் 200 முதல் 500 டாஸ்மாக் கடைகள் வரை மூடப்படலாம் எனத் தகவல் வெளியாகியுளுள்து. இது தொடர்பாக ஓரிரு நாட்களில் முதலமைச்சர் விஜய் உத்தரவு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவில், பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீ. எல்லைக்குள் இருக்கும் மதுபான கடைகளை ஆய்வு செய்து மூட உத்தரவிடப்பட உள்ளதாக தகவல்.