முதலமைச்சர் விஜய்- நடிகர் அஜித் 
தமிழக செய்திகள்

அஜித்தின் ரேஸை முதலமைச்சர் விஜய் நேரில் காண உள்ளதாக தகவல்

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

லண்டன் செல்லும் முதலமைச்சர் விஜய் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை நேரில் காண உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லண்டன் பயணம்

தமிழ்நாட்டுக்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருகிற 10-ந்தேதி முதலமைச்சர் விஜய் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தொழில்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வருகிற 10-ந்தேதி பிரிட்டன் சென்று செப்டம்பர் 16-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இந்த பயணத்தின் போது பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், லண்டன் செல்லும் முதலமைச்சர் விஜய் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை நேரில் காண உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எதிர்பார்ப்பு

லண்டனில் வரும் 11 மற்றும் 12-ந்தேதிகளில் MICHELIN LE MANS CUP கார் பந்தயம் நடைபெற உள்ளது. இதனால் முதலமைச்சரின் லண்டன் பயணமும், கார் பந்தயமும் ஒரே நேரத்தில் நிகழ்வதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

முன்னதாக, தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே மோட்டார் பந்தயங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும். மேலும் ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3 மற்றும் ஃபார்முலா 4 உள்ளிட்ட பன்னாட்டு பந்தயங்களை நடத்தும் வகையில் சர்வதேசத் தரத்திலான பந்தயத் தடம் மற்றும் பயிற்சி மையங்கள் இரு அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு நடிகர் அஜித்குமார் நன்றி தெரிவித்து இருந்தார். அஜித் கூறுகையில், மோட்டார் விளையாட்டு உட்பட அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் தேவையான முக்கியத்துவத்தை அளித்து, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான தமிழ்நாடு அரசின் திட்டங்களை அறிவித்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய்க்கு எனது மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT