தமிழக செய்திகள்

புதுச்சேரியில் கட்சி மறுசீரமைப்பு- தி.மு.க. தலைமை அறிவிப்பு

தமிழ்நாட்டில் இப்பணி முழுவேகத்தில் நடைபெறும் அதே சமயத்தில், புதுச்சேரி மாநிலத்திலும் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என மாண்புமிகு கழகத்தலைவர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ள மறுசீரமைப்புக்குழு, நவம்பர் 10க்குள் பரிந்துரைகளை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கழகத்தின் பவளவிழா மற்றும் நூற்றாண்டு நோக்கி முன்னேறும் பயணத்தில், புதுச்சேரி மாநிலத்திலும் புத்தெழுச்சியை ஏற்படுத்த நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பரிந்துரைகள்

கழக பவளவிழா கண்டு நூற்றாண்டை நோக்கி நடைபோடும் நம்முடைய திராவிட முன்னேற்றக்கழகம் புத்தெழுச்சியைப் பெற - அடுத்தகட்டப் பயணத்தில் வெற்றிகளை அடையை, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அமைக்கப்பட்ட மறுசீரமைப்புக்கு குழுவானது பல்வேறு பரிந்துரைகளை கழகத்தலைவர் அவர்களிடம் வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் இப்பணி முழுவேகத்தில் நடைபெறும் அதே சமயத்தில், புதுச்சேரி மாநிலத்திலும் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என மாண்புமிகு கழகத்தலைவர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

எனவே, புதுச்சேரி மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய கழக சீரமைப்புகள் குறித்தும் தங்கம் தென்னரசு தலைமையிலான மறுசீரமைப்புக்குழு, நவம்பர் 10-ஆம் தேதிக்குள் தனது பரிந்துரைகளை வழங்கிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT