சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று, ரெனால்ட் குழுமம் மற்றும் ராம்கோ குழுமம் போன்ற முன்னணி தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஆகியோர் முதலமைச்சர் விஜயை சந்தித்து பேசினார்கள்.
இந்த இரண்டு தொழில் நிருவனங்களிடமும் முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இந்த சந்திப்பில், ராம்கோ குழுமத்தின் உயர்மட்ட அலுவலர்கள் குழுமத்தின் தலைவர் பி.ஆர். வெங்கட்ராம ராஜா மற்றும் ராம்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அபிநவ் ராஜா ஆகியோரிடம் முதலமைச்சர் கூறியதாவது, 'தங்கள் தொழில் நிறுவனம் நீண்டகாலமாக நீடிக்கிறது.
மேலும், தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து முழு ஆதரவு அளிக்கும் என்பதை உறுதிப்படுத்தி, மாநிலத்துடன் ராம்கோ குழுமம் தமது கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துமாறு' கேட்டுக்கொண்டார்.
இந்திய ரெனால்ட் குழுமத்தின் தலைமை செயல் அலுவலர் ஸ்டீபன் டெப்லேஸ், ரெனால்ட் குழுமத்தின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் துணை தலைவர் ஹம்சா திர் மற்றும் இந்திய ரெனால்ட் குழுமத்தின் கார்ப்பரேட் விவகாரங்கள் பொது மேலாளர் நரசிம்மன் புருஷோத்தமன் ஆகியோரிடம் முதலமைச்சர்,"தமிழ்நாட்டின் மோட்டார் வாகன உற்பத்தியில், ரெனால்ட் குழுமம் மேற்கொண்டுவரும் மதிப்புமிக்க கூட்டாண்மையைப் பாராட்டினார்கள்.
மேலும், நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு முழுமையான ஆதரவை வழங்கும் என்பதை தெரிவித்து, மாநிலத்தில் ரெனால்ட் குழுமம் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொள்ளுமாறும்" ஊக்குவித்ததாக கூறனார்.