தமிழக செய்திகள்

அரக்கோணத்தில் மறுசீரமைப்பு பணி - 57 மின்​சார ரெயில்களின் சேவையில் மாற்றம்

அரக்​கோணம் - சென்னை கடற்கரைக்கு இயக்​கப்​படும் 4 மின்​சார ரெயில்​களும் பகுதியாக ரத்து செய்​யப்​படுகிறது.

சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்​திக்குறிப்​பில் கூறி இருப்பதாவது:-

அரக்​கோணம் யார்​டில் மறுசீரமைப்பு பணி நடக்​க​ உள்​ள​தால், 57 ரெயில்​களின் சேவை​யில் மாற்​றம் செய்​யப்​பட்டுள்ளது. இதன்படி அரக்கோணம் - திருத்​தணி இடையே நாளை (13-ந்தேதி) முதல் 26-ந்தேதி வரை அதி​காலை 4, 5 மணிக்கு இயக்​கப்​படும் மின்​சார ரெயில்​கள், திருத்​தணி - அரக்​கோணம் இடையே இரவு 9.15, 11.10 மணிக்கு இயக்​கப்​படும் மின்​சார ரெயில்​கள், திருத்​தணி - சென்னை சென்ட்​ரல் இடையே காலை 6.30 மணிக்கு இயக்​கப்​படும் மின்சார ரெயில் ஆகிய 5 ரெயில்​கள் ரத்து செய்​யப்படும்.

சென்னை சென்ட்​ரல் - திருச்​சானூர் இடையே வருகிற 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை காலை 9.50 மணிக்கு இயக்​கப்​படும் மெமு ரெயில், திருச்​சானூர் - சென்னை சென்ட்​ரல் இடையே மதி​யம் 1.30 மணிக்கு இயக்​கப்​படும் மெமு ரெயில், அரக்​கோணம் - வேலூர் இடையே பிற்​பகல் 2.50 மணிக்கு இயக்​கப்​படும் மெமு ரெயில், வேலூர் - அரக்​கோணம் இடையே காலை 10 மணிக்கு இயக்​கப்​படும் மெமு ரெயில் ஆகி யவை ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்​கரை - அரக்​கோணம் இடையே நாளை (13-ந்தேதி) முதல் 26-ந்தேதி வரை அதி​காலை 4.05, மதியம் 2.25, மாலை 6.15 மணிக்கு இயக்​கப்​படும் மின்​சார ரெயில்​கள், திரு​வாலங்​காடு - அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்​யப்படுகிறது.

சென்னை சென்ட்​ரல் - அரக்​கோணம் இடையே நாளை (13-ந்தேதி) முதல் 26-ந்தேதி வரை காலை 6.30, 9.10, 10.30, 11, ​பகல் 12.40, 1.25, 3.45, மாலை 4.45, 5.15, 6.05, 6.40, இரவு 7.30, 7.45, 8.20, 9.10, 10 மணிக்கு இயக்​கப்​படும் மின்​சார ரெயில்​கள், திரு​வாலங்​காடு - அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

அரக்​கோணம் - சென்னை சென்ட்​ரல் இடையே நாளை (13-ந்தேதி) முதல் 26-ந்தேதி வரை அதி​காலை 3.45, 4.25, 5.25, காலை 6.40, 8.15, 8.55, 11.15, ​பகல் 12, 1.40, 2.25, 3.40, மாலை 4.50, 6, இரவு 7, 7.25, 8.25, 8.50, 9.45 மணிக்கு இயக்​கப்பட வேண்​டிய மின்​சார ரெயில்​கள் பகுதியாக ரத்து செய்​யப்​படுகிறது. இந்த ரெயில்​கள், அரக்​கோணத்​துக்கு பதிலாக திரு​வாலங்​காட்​டில் இருந்து சென்னை சென்ட்​ரலுக்கு புறப்பட்டு செல்​லும். இதுதவிர, அரக்​கோணம் - சென்னை கடற்கரைக்கு இயக்​கப்​படும் 4 மின்​சார ரெயில்​களும் பகுதியாக ரத்து செய்​யப்​படுகிறது.

சென்னை சென்ட்​ரல் - திருத்​தணி இடையே தலா 2 மின்​சார ரெயில்கள் பகுதியாக ரத்து செய்​யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.