தமிழக செய்திகள்

முதலமைச்சர் விஜயின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் வெளியீடு

முதலமைச்சர் விஜய் பதவி ஏற்றதும் மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

தமிழக முதலமைச்சராக ச.ஜோசப் விஜய் கடந்த 10-ந்தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும் மக்கள் முன்னிலையில் முதலமைச்சர் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும், போதைப்பொருட்கள் தடுப்புப்படை அமைக்க கையெழுத்திட்டார்.

இந்நிலையில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜயின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்கள், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், தமிழ்நாடு அரசின் தன்னாட்சி அமைப்புகள், ஏனைய அரசு கட்டடங்களில் இந்த புகைப்படத்தை பயன்படுத்துமாறு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.