தமிழக செய்திகள்

லாகூரில் 'ரஹ்மான் கலி' என்ற இடத்தின் பெயர் 'ராம் கலி' என மாற்றம்: பாகிஸ்தான் முடிவுக்கு காரணம் என்ன?

லாகூர் பாரம்பரியப் பகுதி மீட்டெடுப்பு என்ற முயற்சியின் முன்னெடுப்பு காரணமாக லாகூரில் பாகிஸ்தான் பிரிவினைக்கு முந்தைய பெயர்கள் சூட்டப்பட்டு வருகின்றன.

பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரிந்த பிறகு, பாகிஸ்தானில் இந்துக்கள், சீக்கியர்கள் சிறுபான்மையினர் ஆகினர். அவர்களுக்கு ஏராளமான அவலம் ஏற்பட்டது. பராம்பரிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களின் இந்து பெயர்கள் முஸ்லிம் பெயர்களாக மாறியது.

இந்த நிலையில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூரில் உள்ள முஸ்லிம் பெயர்கள் கொண்ட தெருக்களின் பெயர் தற்போது இந்துகள் பெயராக மாற்றப்பட்டு வருகிறது.

லாகூரில் உள்ள ஒரு தெருவிற்கு ரஹ்மான் கலி எனப் பெயரிடப்பட்டிருந்தது. அதை தற்போது ராம் கலி என மாற்றப்பட்டுள்ளது.

இந்து, சீக்கியர்கள், ஜெயின் பெயர்கள் கொண்டு தெருக்கள் மற்றும் பாராம்பரிய இடத்திற்கான பெயர் இஸ்லாமிய பெயர்களாக மாறியது. தற்போது பழைய பெயர்கள் வைக்கப்பட்டு வருகிறது.

பெயர் மாற்றும் இம்முயற்சியானது, பாகிஸ்தானின் பஞ்சாப் அரசாங்கம் முன்னெடுக்கும் மிகப் பெரிய ‘லாகூர் பாரம்பரியப் பகுதி மீட்டெடுப்பு’ (LHAR) திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டம், நாட்டின் கலாசாரத் தலைநகரான லாகூரை, இந்தியப் பிரிவினைக்கு முந்தைய அதன் பாரம்பரிய நிலைக்கு மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.