தமிழக செய்திகள்

அரசு பள்ளி கொடி கம்பத்தில் மதுபாட்டில்களை ஏற்றி ரீல்ஸ்

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காலி மதுபாட்டிலை அகற்றினர்.

தேசிய கொடி ஏற்றும் கொடிக்கம்பத்தில் காலி மதுபாட்டிலை ஏற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள பண்ணைப்புரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கரியணம்பட்டி, பண்ணைபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

கடந்த 3 நாட்களாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த பள்ளி மைதானத்தில் கொடிக்கம்பம் ஒன்று உள்ளது. இந்த கம்பத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை பயன்படுத்தி போதை கும்பல் காலி மதுபாட்டில்களை கயிற்றில் கட்டி தேசிய கொடிபோல் ஏற்றி வைத்துள்ளனர். மேலும் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டனர்.

மதுபாட்டில்

இச்சம்பவம் காட்டுத்தீ போல் வேகமாக பரவிய நிலையில் கோம்பை போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காலி மதுபாட்டிலை அகற்றினர். மேலும் சர்ச்சைக்குரிய வீடியோவை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்ததையும் நீக்கினர். இச்செயலில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேசிய கொடி ஏற்றும் கொடிக்கம்பத்தில் காலி மதுபாட்டிலை ஏற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT