அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் குறைந்தது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் அதிகபட்சமாக வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடிவரை தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் குறைந்தது. இதற்கிடையே அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 54.78 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2702 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் 20.95 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.