வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளனர்.
அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
பருவமழை காலத்தில் தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளுக்குள் மழைநீர் புகுந்து விடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனையின் மேற்கூரையில் இருக்கும் குப்பைகளை அகற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.