தமிழ்நாடு செய்திகள்

தனியார் விடுதியில் சென்னை ரியல் எஸ்டேட் அதிபர் மர்ம மரணம்

பக்கத்து அறையில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது பாத்ரூமில் இறந்து கிடந்தார். போலீசார் முருகேசனின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மாலை மலர்

திண்டுக்கல்:

சென்னை வில்லிவாக்கம், என்.எம்.டி.ஹெச். ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (61). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் வந்த இவர் பஸ் நிலையம் அருகே தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். மேலும் இங்கிருந்தபடியே ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை அவரது அறை கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து பக்கத்து அறையில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது பாத்ரூமில் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் நகர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முருகேசனின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எவ்வாறு இறந்தார்? வழுக்கி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.