தமிழக செய்திகள்

வினோத நோய்க்கு சிறுவன் பாதிப்பு- சிகிச்சைக்கு அரசின் உதவியை நாடும் பெற்றோர்

பத்தாம் வகுப்பு படிக்கும் வரை சராசரி சிறுவர்களை போல பள்ளிக்கு சென்று படித்து பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற சிறுவன் மோனிஷ் கண்ணாவுக்கு திடீரென மயங்கி விழுந்து உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தன் மகன் தற்போது சுயநினைவின்றி இருப்பது மனவேதனை அளிப்பதாகவும், தமிழக அரசு தன்னுடைய மகனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என பெறறோர் கலெக்டரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள இரட்டை ஊரணி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செந்தில். இவரது மகன் மோனிஷ் கண்ணா (வயது 19). பத்தாம் வகுப்பு படிக்கும் வரை சராசரி சிறுவர்களை போல பள்ளிக்கு சென்று படித்து பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற சிறுவன் மோனிஷ் கண்ணாவுக்கு திடீரென மயங்கி விழுந்து உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தலையில் கோளாறு என்று கூறி மதுரை, சென்னை, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் அவரது பெற்றோர் அழைத்துச் சென்று சிகிச்சை எடுத்துள்ளனர்.

சிறுவன்

ஆனாலும் சிறுவனின் உடல்நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதிலும் கடந்த ஆறு ஆண்டுகளாக சிறுவன் பேச முடியாமலும், நடக்க முடியாமலும், எப்போதும் மயங்கிய நிலையிலேயே இருந்து வருகிறான். சிறுவனின் சிகிச்சைக்காக விவசாயி செந்தில் தன்னுடைய வீடு, நெல் வயல்கள் போன்றவற்றை விற்று பல லட்சம் ரூபாய் செலவிட்டும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் இனி விற்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலையில் அரசின் உதவியை எதிர்பார்த்துள்ளனர்.

தமிழக அரசு

தமிழக அரசு சிறுவன் மோனிஷ் கண்ணாவுக்கு ஏற்பட்டுள்ள நோய்க்கு உயர்தரமருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு சார்பில் மருந்து மாத்திரைகள் போன்றவற்றை இலவசமாக வழங்க வேண்டும் என்று ராமநாதபுரத்தில் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர்

தமிழக முதலமைச்சர் விஜய் கவனத்திற்கு கொண்டு சென்று தங்களது மகனுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேதனையுடன் கேட்டுக் கொண்டுள்ளனர். லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே இது போன்ற ஒரு நோய் வரும் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், சராசரி சிறுவர்களைப் போல தங்களது மகனும் மாற வேண்டும் எனவும், 6 ஆண்டுகளாக மகனின் நோயுடன் போராடி சொத்துக்களை விற்று லட்சக்கணக்கில் பணத்தை செலவிட்டும் இதுவரை குணமாகாததால் வேதனை அடைந்துள்ள தாயின் வேதனையை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? சராசரி சிறுவர்களைப் போல ஆடி, பாடி, ஓடியாடி விளையாண்ட தன் மகன் தற்போது சுயநினைவின்றி இருப்பது மனவேதனை அளிப்பதாகவும், தமிழக அரசு தன்னுடைய மகனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என பெறறோர் கலெக்டரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.

SCROLL FOR NEXT