தமிழக செய்திகள்

வெறிச்சோடிய தேர்த்தங்கால் பறவைகள் சரணாலயம்

மழை பெய்யாததால் தண்ணீர் குறைந்து பறவைகள் வரத்து இல்லாமல் தேர்த்தங்கால் பறவைகள் சரணாலய வளாகமே வெறிச்சோடி காணப்படுகிறது.

அடுத்த மாதம் வாக்கில் மழை பெய்தால் பறவைகள் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக சரணாலய வட்டாரங்கள் தெரிவித்தன.

ராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கால் பறவைகள் சரணாலயம் வருடா வருடம் அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை ரஷ்யா, சைபிரியா, ஈரான், ஈராக், மங்கோலியா, இலங்கை, கஜகஸ்தான் மத்திய ஆசியா கிழக்கு ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்து வெள்ளை அரிவாள் மூக்கன், கருந்தலை அரிவாள் மூக்கன், புள்ளி அலகு வாத்து, நத்தை கொத்தி நாரை, நெடுங்கால் உள்ளான், செங்கால் நாரை, கரண்டி மூக்கு நாரை போன்ற பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் ஆயிரக்கணக்கில் வருகை தந்து தேர்த்தங்கால் பறவைகள் சரணாலயத்தில் ஓங்கி உயர்ந்த மரங்கள் மீது கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து குஞ்சுகளுடன் தங்களுடைய தாயகத்துக்கு செல்வது வழக்கம்.

மழை

ஆனால் இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் தண்ணீர் குறைந்து பறவைகள் வரத்து இல்லாமல் தேர்த்தங்கால் பறவைகள் சரணாலய வளாகமே வெறிச்சோடி காணப்படுகிறது. இது தொடர்பான ட்ரோன் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் வாக்கில் மழை பெய்தால் பறவைகள் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக சரணாலய வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT