தமிழக செய்திகள்

தமிழ்நாட்டில் மார்ச் 21-ல் ரம்ஜான் - தலைமை காஜி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் ரம்ஜான் கொண்டாடப்படும் என தலைமை காஜி தெரிவித்துள்ளது.

மாலை மலர்

இஸ்லாமியர்களின் முக்கிய மாதமாக கருதப்படும் ரமலான் மாதத்திற்கான பிறை கடந்த பிப்.19ம் தேதி தென்பட்டது. இதனைத்தொடர்ந்து இஸ்லாமியர்கள் ரலமான் நோன்பை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில்  ஷவ்வால் மாதத்திற்கான பிறை இன்று தென்படவில்லை. இதனால் மார்ச் 21ஆம் தேதி தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி தெரிவித்துள்ளது.

இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் ரமலான் மாதத்தில் தான் அருளப்பட்டது என்பதால், இஸ்லாமியர்கள் இந்த மாதத்தை புனித மாதமாக கருதி, மாதம் முழுக்க நோன்பினை கடைபிடிப்பார்கள்.

இஸ்லாமிய வழக்கத்தில் சந்திரனின் பிறை பார்க்கப்பட்டு மாதம் கணக்கிடப்படுகிறது. அதன்படி மாத்ததின் முடிவில் பிறை தென்பட்டால் ஒரு மாதத்தின் நாட்களை 29-தோடு நிறுத்திக் கொள்வர். பிறை தென்படவில்லை என்றால் 1 நாளை சேர்த்து 30-ஆக பூர்த்தி செய்வர்.

இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் எவ்வாறு நோன்பு மேற்கொள்வர்?

அதிகாலை சூரியன் உதயமாவதற்கு முன்பு சஹர் எனப்படும் அந்த நேரத்திற்கான உணவுகளை உட்கொண்டு நோன்பினை தொடங்குவார்கள். இடையில் தண்ணீர், தேநீர், உணவு என எதையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

மாலை சூரியன் மறைந்ததும் இஃப்தார் எனப்படும் நோன்பு திறக்கும் நேரத்தில் பேரித்தம் பழத்தை முதல் உணவாக எடுத்துக் கொண்டு நோன்பினை முடித்துக் கொள்வார்கள். இந்த சுழற்சி முறையை முஸ்லிம்கள் ஏறத்தாழ ஒரு மாத காலம் கடைபிடிப்பர். அதாவது இந்த ரமலான் மாதம் முழுவதும் கடைபிடிப்பர்.

முடிவில் மீண்டும் அடுத்த மாதமான ஷவ்வால் மாதத்தின் பிறையை வானில் தேடத் தொடங்குவார்கள். பிறை தென்படவில்லை எனில் ரமலான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து நோன்பை கடைபிடிப்பார்கள். ஒருவேளை பிறை தென்பட்டால் அடுத்த நாள் ரம்ஜான் பெருநாளை கொண்டாடுவார்கள்.