தமிழக செய்திகள்

வாரிசு அரசியல்: சுதீசுக்கு மாநிலங்களவை எம்.பி.யாக தகுதி இல்லையா? - #Premalatha ஆவேசம்

மாநிலங்களவை எம்.பி. சீட் என்ற தே.மு.தி.க.வின் நீண்ட நாள் கனவு நனவாகி இருக்கிறது.சுதீஷ் தொடங்கி கட்சியில் உள்ள அனைவரும் எனக்கு சமம் தான்.

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.விற்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* மாநிலங்களவை எம்.பி. சீட் என்ற தே.மு.தி.க.வின் நீண்ட நாள் கனவு நனவாகி இருக்கிறது.

* தே.மு.தி.க.விற்கு முன்னதாகவே மாநிலங்களவை எம்.பி. சீட் கிடைத்திருக்க வேண்டும். சற்று காலதாமதமாக கிடைத்துள்ளது.

* 2024-ல் தே.மு.தி.க.விற்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுத்திருக்க வேண்டியது, அது நடக்காமல் போனது.

* மாநிலங்களவை எம்.பி.யாக இந்திய அளவில் ஜனநாயக கடமையாற்ற உள்ள சுதீசுக்கு வாழ்த்துகள்.

வாரிசு அரசியல் தொடர்பான கேள்விக்கு,

* சுதீஷ் கட்சியின் ஆரம்பத்தில் இருந்து உழைக்கவில்லையா?

* தே.மு.தி.க. தொண்டர்களின் விருப்பத்தின்பேரில் விஜயபிரபாகரன் கடந்த தேர்தலில் போட்டியிட்டார்.

* சுதீஷ், விஜய பிரபாகரன் தவிர வேறு யார் எங்கள் குடும்பத்தில் இருந்து கட்சியில் இருக்கிறார்கள்?

* கட்சியின் தொடக்கம் முதல் உழைத்த சுதீசுக்கு மாநிலங்களவை எம்.பி.யாக தகுதி இல்லையா?

* விமர்சிப்பவர்கள் விமர்சித்துக்கொண்டே தான் இருப்பார்கள். சுதீஷ் தொடங்கி கட்சியில் உள்ள அனைவரும் எனக்கு சமம் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.