தமிழக செய்திகள்

வழக்கறிஞராக பதிவு செய்த பேரறிவாளன்.. காங்கிரஸ் கண்டனம் - பாா் கவுன்சில் விளக்கம்

பேரறிவாளன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பேரறிவாளன்(54 வயது) 31 ஆண்டுகள் சிறைவாசத்தின் கடந்த 2022 இல் விடுதலையானார்

சட்டப் படிப்பை முடித்துள்ள பேரறிவாளன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.பி.யும், வழக்கறிஞருமான ஆா்.சுதா, குடியரசுத் தலைவா், பிரதமா் ஆகியோருக்கு புகாா் மனு அனுப்பி உள்ள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பேரறிவாளன் வழக்குரைஞா் பதிவை திரும்பப் பெற பாா் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில் பேரறிவாளன் வழக்கறிஞராக பதிவு செய்ததில் எந்த விதிமீறலும் இல்லை என்று பாா் கவுன்சில் உறுப்பினரும், வழக்குரைஞா் பதிவுக் குழு தலைவருமான கே.பாலு விளக்கம் அளித்துள்ளாா்.

அவர் அளித்த விளக்கத்தில், சட்டப்படி ஒருவா் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு அதற்குரிய தண்டனையை அனுபவித்து முடித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கறிஞராக பதிவு செய்யலாம்

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவா் வழக்கறிஞராக பதிவு செய்வது இது முதல்முறை அல்லை.

பேரறிவாளனின் ஆவணங்கள் பாா் கவுன்சிலின் வழக்கறிஞர் பதிவுக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு அதன் பிறகே பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டாா். இதில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை என்று கூறியுள்ளார்.