சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பேசினார். தேர்தலுக்கு பிறகு திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க ரஜினிகாந்த் பேசியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்நிலையில், சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தேர்தல் முடிவுகள் வந்த பிறகு இணையத்தில் விமர்சனங்கள் பரவி வருகிறது. பதில் சொல்லாவிட்டால் உண்மையாகி விடும்.
* தேர்தல் முடிவுகள் வந்தவுடன் ஸ்டாலினை சென்று பார்த்தேன். அது அரசியலை தாண்டி நட்பு. நண்பர் என்ற முறையில் அவரை சந்தித்தேன்.
* விஜய் ரசிகர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். விஜய்க்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தி விடக்கூடாது.
* விஜய் வென்றது மகிழ்ச்சியே.
* நான் அரசியலில் இல்லாத போது முதலமைச்சர் விஜய் மீது ஏன் பொறாமைப்பட வேண்டும். கமல்ஹாசன் முதலமைச்சராக ஆகி இருந்தால் பொறாமை வந்து இருக்குமோ என்னமோ? கிடைக்கிறது கிடைக்காம இருக்காது. கிடைக்காமல் இருப்பது கிடைக்காது.
* விஜய் தனி ஆளாகாக வெற்றி பெற்றிருக்கிறார். அது ஆச்சரியம் கலந்த ஒரு சந்தோஷம்.
* விஜய் மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.