தமிழக செய்திகள்

பட்டிமன்றத்தை பாமரர்களிடம் கொண்டு சென்றவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா - ரஜினிகாந்த்

படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்றவர் சாலமன் பாப்பையா.

பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா மதுரையில் காலமானார்.

பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் காலமானார்.

அவரது மறைவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கவிஞர் வைரமுத்து, பட்டிமன்ற நடுவர் கு.ஞானசம்பந்தன், அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT