சென்னை:
காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ் குமார் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அறிவித்துள்ளார்.
மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜேஷ் குமார் அவர்கள், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களால், தமிழக காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இம்முடிவிற்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தப் புதிய பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்ற அவருக்குத் தேவையான வலிமையும் ஞானமும் கிட்ட வாழ்த்துகிறோம் என காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.