தமிழக செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பு சுமூகமாக இருந்தது- ஆளுநர் மாளிகை

மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர்.இருவரும் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

மாலை மலர்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு தொடர்பாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆளுநர் ஆர்.என்,ரவியும், முதலமைச்சர் ஸ்டாலினும் மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர்.

இருவரும் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். ஆளுநர், தமிழக மக்களின் நலனுக்கான தனது முழு அர்ப்பணிக்பை மீண்டும் வலியுறுத்தினர். இருவரும் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

அரசியலமைப்பு சட்டத்தின் எல்லைக்குள் மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பு சுமூகமாக இருந்தது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.