இரணியல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. நுள்ளிவிளை பகுதியிலும் அதிகளவில் மழை பெய்ததால் அந்த பகுதியில் இருந்த ரெயில்வே தண்ட வாளத்தை மழைநீர் சூழ்ந்தது.
குமரி மாவட்டம் முழுவதும் நேற்று மாலை கனமழை கொட்டியது. இரணியல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. நுள்ளிவிளை பகுதியிலும் அதிகளவில் மழை பெய்ததால் அந்த பகுதியில் இருந்த ரெயில்வே தண்ட வாளத்தை மழைநீர் சூழ்ந்தது.
தண்டவாளத்தின் நடுப்பகுதி மற்றும் இருபுறங்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தணட வாளத்தில் மழைநீர் தேங்கியிருந்த போதிலும், ரெயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.