தமிழக செய்திகள்

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

சென்னையில் நேற்று 6 இடங்களில் அதி கனமழை பெய்த நிலையில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால், வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. வடகடலோர பகுதிகளில் புதிய மேகக் கூட்டங்கள் உருவாகி உள்ளன.

சென்னையில் நேற்று 6 இடங்களில் அதி கனமழை பெய்த நிலையில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சென்னையில் 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்பதால் இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. நாளை கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், நாமக்கல், விழுப்புரம் மற்றும் ஈரோடு ஆகிய 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT