தமிழக செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலின்படி, 22 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தமிழ்நாடு கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வருகிற 26-ந்தேதி வரை கன முதல் மின கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

அதன்படி, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சாலைகளில் தேங்கிய மழை நீரை ராட்சத மோட்டார்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதனிடையே, பிற்பகல் 1 மணிவரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், கடலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், நீலகிரி, திருவாரூர், தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT