தமிழக செய்திகள்

முதல்வர் ஸ்டாலினை பா.ஜ.க.வால் பணியவைக்க முடியாது: ராகுல் காந்தி

பா.ஜ.க. பிடியில் அ.தி.மு.க. சிக்கியுள்ளது என்றார்.

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி திருச்சி துறையூரில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழ்நாட்டு வரலாற்றில் அதிமுக சிறப்புமிக்க கட்சி. ஆனால், தற்போது பாஜகவின் முகமூடியாகவும் , பொம்மை கட்சியாகவும் அதிமுக இருக்கிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்க பாஜகவிடம் சரணடைந்துவிட்டனர். பாஜக பிடியில் அதிமுக சிக்கியுள்ளது.

தமிழகத்தில் அதிமுகவை ஆட்சியில் அமரவைத்து பொம்மை முதலமைச்சரை தனது கட்டுப்பாட்டில் வைக்க பிரதமர் மோடி முயற்சிக்கிறார். அதற்கு நாம் இடம்கொடுக்கக்கூடாது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் கொள்கைகளை சமரசம் செய்யமாட்டார் என பாஜகவுக்கு தெரியும். அவரை பணியவைக்க முடியாது என தெரிவித்தார்.