தமிழக செய்திகள்

கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பிரசாரம் - பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை

ராகுல் காந்தி வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழகம் வரும் ராகுல் காந்தி நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம், குளச்சல் சட்டமன்ற தொகுதிகளில் நாளை பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். கன்னியாகுமரியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில் ராகுல் காந்தி வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மண்டைக்காடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கூட்டம் நடைபெறும் இடம், ஹெலிகாப்டர் இறங்கும் இடங்களை பார்வையிட்டனர்.

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கர்நாடக தொழிலாளர் நல வாரிய அமைச்சர் சந்தோஷ் லார்ட், கர்நாடக உயர் கல்வித்துறை அமைச்சர் சுதாகர், கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நவீன்குமார், பினுலால்சிங், கே.டி.உதயம், தக்கலை மின்வாரிய செயற்பொறியாளர் பிரேமலதா, குளச்சல் உதவி பொறியாளர் ராதாமணி, மணவாளக்குறிச்சி உதவி பொறியாளர் குமரேசன், குளச்சல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து, குளச்சல் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகன், பொதுப்பணித்துறை, மருத்துவ துறை உட்பட பலர் உடனிருந்தனர்.