நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் தனது எக்ஸ் தள பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
நடிகர் ரஜினி எவ்வளவு நெருக்கமோ அந்த அளவிற்கு முதல்வர் விஜயும் நெருக்கமானவர்.
நான் அரசியலுக்கு வருவது குறித்து முதலில் என் தாய் மறுத்தார். தற்போது அவர்கள் அனுமதித்த நிலையில் நான் அரசியலுக்கு வருவேன்.
ஆனாலும் யாருடன் சேர்வது குறித்து மக்களின் கருத்துகளையும் கேட்க விரும்புகிறேன்.
அதேபோல் வேண்டாம் என்று சொன்னால் நான் அரசியலில் நுழையமாட்டேன். அவ்வகையில் சமூகத்திற்கான சேவையை தொடர்ந்து பணியாற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.