திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
குவாரி விதிமீறல் வழக்கு தொடர்பாக மதுரையில் திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பாலமேடு, அலங்காநல்லூரில் உள்ள குவாரிகளில் விதிகளை மீறி அதிக அளவில் செம்மண், கற்கள் வெட்டி எடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல் குவாரி டெண்டர் தொடர்பான ஆவணங்கள், நிதி பரிவர்த்தனை பதிவுகள் மற்றும் முக்கிய ஆவணங்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
சோதனை காரணமாக முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.