தமிழக செய்திகள்

கொத்தடிமைகளுக்கு தூயசக்தியின் நேர்மையான ஆட்சி கசக்கத்தான் செய்யும்!- தவெக

தீயசக்திக்கு மக்கள் மீண்டும் பாடம் புகட்டப் போவது உறுதி உறுதி உறுதி!

ஆவேசமாக அலறினாலும் சத்தமாக கதறினாலும் தீயசக்தியினர் இனி மக்கள் மனங்களை வெல்ல முடியாது என தவெக ஐடி விங் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தவெக ஐடி விங் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பொதுவெளியில் ஆபாச மொழியில்

வன்மத்தோடு வசைபாடுவதிலும், கண்ணியமற்ற, மாண்பில்லாத பேச்சுகளால் அரசியல் மேடைகளை அசிங்கப்படுத்துவதிலும் கைதேர்ந்தவர்கள் அனைவரும் தீயசக்தியின் அடிவருடிகளே!

கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு என்ற பேரறிஞர் அண்ணாவின் கோட்பாட்டை மறந்து, ஊழல், சுரண்டல், லஞ்சம் என்ற தீயசக்தியின் கோட்பாட்டை நெஞ்சில் சுமக்கும் அறிவாலயக் கொத்தடிமைகளுக்கு தூயசக்தியின் நேர்மையான ஆட்சி கசக்கத்தான் செய்யும்!

தீயசக்தியின் கடந்தகால போலி வரலாற்று அத்தியாயங்கள் பக்கம் பக்கமாக அம்பலப்பட்டு விட்டது, ஆவேசமாக அலறினாலும்

சத்தமாக கதறினாலும் தீயசக்தியினர் இனி மக்கள் மனங்களை வெல்ல முடியாது!

தீயசக்திக்கு மக்கள் மீண்டும்

பாடம் புகட்டப் போவது

உறுதி உறுதி உறுதி!

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT