தமிழக செய்திகள்

புதுக்கோட்டை: 17 வயது சிறுமிக்கு திருமணம் - 4 பேர் மீது வழக்குப்பதிவு

17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு. திருமணமான சிறுமி, 2 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது.

மாலை மலர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே வடக்கு காட்டுப்பட்டி பகுதியில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமூகநலத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அந்த சிறுமி, 2 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது

இந்த விவகாரம் தொடர்பாக திருப்பதி (21), மூக்கன் (60), ராணி (50), முத்து (62) ஆகிய நால்வர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.