தமிழக செய்திகள்

புதுக்கோட்டை தெற்கு, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர்கள் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க.-வில் கோஷ்டி அணி உருவாகியுள்ள நிலையில், எதிராக செயல்படுபவர்களை எடப்பாடி பழனிசாமி கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி வருகிறார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.கே. வைரமுத்து, தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் சி. கிருண்ஷ்ண முரளி ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.