தமிழக செய்திகள்

பெரியபாளையம் அருகே கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மறியல்

வடமதுரை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஊராட்சி செயலர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

வடமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் எதிரே பெரிய பாளையம்- ஆவடி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.

காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 526 ஊராட்சிகளில் இன்று காலை கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன.

கிராம சபை கூட்டம்

எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் ஊராட்சி செயலர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. பற்றாளராக ஒன்றிய மேற்பார்வையாளர் ஜெனிஸ் குமார் கலந்து கொண்டார்.

வாக்குவாதம்

கூட்டம் நடந்து கொண்டு இருந்தபோது சாலை வசதி, அங்கன்வாடி கட்டிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கிராமமக்கள் ஊராட்சி செயலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீசார்

திடீரென அவர்கள் வடமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் எதிரே பெரிய பாளையம்- ஆவடி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகசெ் ெசய்தனர்.

SCROLL FOR NEXT