அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க 3-ம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு ெதாடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.90 அடியாக உள்ளது. வரத்து 1030 கன அடி. திறப்பு 400 கன அடி. இருப்பு 2069 மி.கன அடி.
வைகை அணையின் நீர்மட்டம் 44.88 அடி. வரத்து 442 கன அடி. திறப்பு 86 கன அடி.இருப்பு 1390 மி.கன அடி.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 116.11 அடி. வரத்து 15 கன அடி. திறப்பு 3 கனஅடி. இருப்பு 83.51 மி.கன அடி. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 27.40 அடியாகவும், சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாகவும் உள்ளது. கனமழை காரணமாக சுருளி அருவியில் இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க 3-ம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கும்பக்கரை அருவியில் நேற்று குளிக்க அனுமதி வழங்கிய நிலையில் நீர்வரத்தை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக பெரும்பாலான குளங்கள், கண்மாய்கள் நிரம்பி வருகின்றன.
பெரியாறு அணை 3.4, தேக்கடி 9.8, கூடலூர் 14.4, சண்முகாநதி அணை 34.6, ஆண்டிபட்டி 7.2, வீரபாண்டி 3.6, வைகை அணை 17.4, போடி 2, உத்தமபாளையம் 15.6 மி.மீ. மழை அளவு பதிவானது.